தலைமறைவான டிரைவர் கைது
பொங்கலூர் அருகே வேன்-மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியானர்கள். இதில் தலைமறைவான டிரைவர் கைது செய்யப்பட்டார்.
பொங்கலூர்
பொங்கலூர் அருகே வேன்-மோட்டார்சைக்கிள்கள் மோதிய விபத்தில் 4 பேர் பலியானர்கள். இதில் தலைமறைவான டிரைவர் கைது செய்யப்பட்டார்.
4 பேர் பலி
புதுக்கோட்டை மாவட்டம், இடையப்பட்டியை சேர்ந்த ரங்கசாமியின் மகன் குமரேசன் (வயது 30). இவரது மனைவி ஆனந்தி (25). இவர்கள் கோவையில் தங்கி தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தனர். அதுபோல் திருநெல்வேலி மாவட்டம் பாப்பாங்குளத்தை சேர்ந்த முருகன் என்கிற பிரம்மநாயகம் (45). இவரது மனைவி முத்துமாரி (40). இவர்களது பெண் குழந்தை மகாகவி (4). முருகன் இந்த 2 குடும்பங்களைச் சேர்ந்தவர்களும் 2 மோட்டார்சைக்கிள்களில் பல்லடத்தில் இருந்து தாராபுரம் ேநாக்கி சென்று கொண்டிருந்தனர். புத்தெரிச்சல் அருகே சென்ற போது எதிரே காய்கறி ஏற்றி வந்த வேன் இவர்கள் மோட்டார்சைக்கிள்கள் மீது மோதி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது.
டிரைவர் கைது
இந்த விபத்தில் குமரேசன், முருகன், முத்துமாரி, மகாகவி ஆகியோர் சம்பவ இடத்திலேயே இறந்தனர். வேன் டிரைவர் தப்பி ஓடி தலைமறைவானார். ஆனந்தி படுகாயம் அடைந்து பல்லடம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.விபத்து குறித்து காமநாயக்கன்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வேன் டிரைவரை தேடிவந்தனர். இந்த நிலையில் நேற்று வாகன சோதனையில் ஒருவரை பிடித்து விசாரித்ததில் அவர் வாகன விபத்து ஏற்படுத்திய திருச்சியைச் சேர்ந்த முருகானந்தம் (24) என்பது தெரியவந்து. உடனடியாக அவரை கைது செய்தனர்.
Related Tags :
Next Story