அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம்
சீர்காழியில் அ.தி.மு.க செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
சீர்காழி:
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நகர அ.தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் பாரதி தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் நற்குணன், சந்திரசேகரன், ரவிச்சந்திரன், சிவகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர கழக செயலாளர் வினோத் வரவேற்று பேசினார். கூட்டத்தில் மாவட்ட கழக செயலாளர் பவுன்ராஜ் கலந்து கொண்டு கட்சி வளர்ச்சி பணிகள் குறித்து பேசினார். தொடர்ந்து சீர்காழி நகர் பகுதியில் அ.தி.மு.க. வேட்பாளர்களுக்கு வாக்களித்த வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பது. வெற்றி பெற்ற நகர்மன்ற உறுப்பினர்கள் திறன்பட மக்கள் பணி மற்றும் கட்சி பணியாற்ற கேட்டுக் கொள்வது. வரும் காலங்களில் 24 வார்டுகளிலும் கூடுதலாக அதிக அளவில் புதிய உறுப்பினர்களை சேர்ப்பது. நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் கட்சிக்கு எதிராக செயல்பட்டவர் மீது நடவடிக்கை எடுப்பது என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தில் பொதுக்குழு உறுப்பினர் ஆனந்த நடராஜன், பேரூர் கழக செயலாளர் போகர்ரவி, மாவட்ட மீனவர் அணி செயலாளர் நாகரத்தினம், முன்னாள் நகர செயலாளர் பக்கிரிசாமி, நகரசபை உறுப்பினர்கள், வார்டு செயலாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story