ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வலியுறுத்தி மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
விழுப்புரம்
விழுப்புரம் பவர்ஹவுஸ் சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின்வாரிய தொழிலாளர் பொறியாளர் ஐக்கிய சங்கத்தின் சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு மாநில துணை பொதுச்செயலாளர் சிவக்குமார் தலைமை தாங்கினார். மண்டல செயலாளர் பெரியசாமி, மாநில செயலாளர் ரவிச்சந்திரன், துணை பொதுச்செயலாளர் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கள்ளக்குறிச்சி வட்ட செயலாளர் வெற்றிவேல் வரவேற்றார். மாநில பொதுச்செயலாளர் சுப்பிரமணியன், தலைவர் கண்ணன், துணைத்தலைவர் ஜெயப்பிரகாஷ் ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.
ஊதிய உயர்வு பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும், 2009-ம் ஆண்டு பணியில் சேர்ந்த ஐ.டி.ஐ. படித்தவர்களுக்கு ஐகோர்ட்டு வழங்கிய தீர்ப்பை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாவட்ட பொருளாளர்கள் விழுப்புரம் பாலசுப்பிரமணியன், கடலூர் அருட்செல்வன், கள்ளக்குறிச்சி ராஜாராம், திருவண்ணாமலை மாவட்ட செயலாளர் சம்பத் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் கடலூர் வட்ட தலைவர் சரவணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story