அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம்


அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம்
x
தினத்தந்தி 9 March 2022 11:34 PM IST (Updated: 9 March 2022 11:34 PM IST)
t-max-icont-min-icon

அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்திய வாகனங்களுக்கு அபராதம்

குடியாத்தம்

வேலூர் மாவட்டம் குடியாத்தம் நகரம், சுற்று வட்டாரப் பகுதிகளில் இயக்கப்படும் வாகனங்களில் அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் பொருத்தப்பட்டு இருப்பதாக அதிகாரிகளுக்கு புகார்கள் வந்தது. அதன்பேரில் வேலூர் துணை போக்குவரத்து ஆணையர் இளங்கோவன், வேலூர் வட்டாரப் போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் ஆகியோர் உத்தரவின் பேரில் குடியாத்தம் மோட்டார் வாகன ஆய்வாளர் எஸ்.பி.ராஜேஷ்கண்ணா தலைமையிலான குழுவினர் குடியாத்தம், பள்ளிகொண்டா ஆகிய பகுதிகளில் தீவிர வாகனச் சோதனை நடத்தினர்.

அப்போது 53 கனரக மற்றும் பயணிகள் வாகனங்களை ஆய்வு செய்தனர். ஆய்வின்போது அதிக சத்தம் வரும் ஹாரன்களை பொருத்தியிருந்த 6 கனரக வாகனங்களுக்கு தலா ரூ.10 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக சத்தம் வரும் ஹாரன்களை பொருத்தியிருந்த வாகனங்களின் டிரைவர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டது. அந்த வாகனங்களில் இருந்த அதிக சத்தம் எழுப்பும் ஹாரன்கள் அகற்றப்பட்டன.

Next Story