திருமயம் அருகே மொபட்டில் சென்ற பெண்ணை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு


திருமயம் அருகே மொபட்டில் சென்ற  பெண்ணை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு மர்மநபர்களுக்கு போலீசார் வலைவீச்சு
x
தினத்தந்தி 10 March 2022 12:07 AM IST (Updated: 10 March 2022 12:07 AM IST)
t-max-icont-min-icon

பெண்ணை தாக்கி 5 பவுன் சங்கிலியை மர்மநபர்கள் பறித்து சென்றனர்.

திருமயம்:
புதுக்கோட்டை கம்பன் நகர்பகுதியை சேர்ந்த அடைக்கலவன் மனைவி பொன்னழகு (வயது 32). இவர் திருமயம் அருகே உள்ள பரளி கிராமத்திற்கு சென்று விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு திரும்பி கொண்டிருந்தார். அப்போது திருமயம்-மதுரை சாலையில் உள்ள சமத்துவபுர பகுதியில் வந்தபோது பின்னால் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பொன்னழகை தாக்கி கழுத்தில் கிடந்த 5 பவுன் சங்கிலியை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர். இந்த சம்பவத்தில் நிலை தடுமாறி கீழே விழுந்த பொன்னழகுக்கு கழுத்தில் காயம் ஏற்பட்டது. இதுகுறித்து அடைக்கலவன் திருமயம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீசார் வழக்குப்பதிவு செய்து பெண்ணிடம் 5 பவுன் தங்க சங்கிலியை பறித்து சென்று 2 மர்ம நபர்களை வலை வீசி தேடி வருகின்றனர்.

Next Story