ஆற்காடு அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை


ஆற்காடு அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
x
தினத்தந்தி 10 March 2022 12:08 AM IST (Updated: 10 March 2022 12:08 AM IST)
t-max-icont-min-icon

ஆற்காடு அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆற்காடு

ஆற்காடு அருகே ஆன்லைன் விளையாட்டில் பணத்தை இழந்த வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

ஆன்லைன் விளையாட்டு

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காட்டை அடுத்த தென்கழனி பகுதியை சேர்ந்தவர் விக்னேஷ் (வயது 23). சென்னையில் தனியார் கம்பெனியில் வேலை செய்து வந்துள்ளார். இந்த நிலையில் விக்னேஷ் பப்ஜி மற்றும் ஆன்லைன் விளையாட்டில் அதிக ஈடுபாட்டுடன் விளையாடி வந்ததாக தெரிகிறது. இதனால் ஆன்லைன் விளையாட்டில் அதிகமாக பணத்தை செலவு செய்து வந்ததால் பணப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. 

இதனால் தெரிந்தவர்களிடம் கடன் வாங்கி ஆன்லைன் விளையாட்டில் செலவு செய்து வந்துள்ளார். ஒரு கட்டத்தில் கடன் கொடுத்தவர்கள் அவரிடம் பணத்தை திருப்பி கேட்டுள்ளனர். இது குறித்து விக்னேஷின் பெற்றோர்களுக்கு தெரிய வரவே அவர்கள் கண்டித்துள்ளனர். 

தூக்குப்போட்டு தற்கொலை

இதனால் மன உளைச்சலுக்கு ஆளான விக்னேஷ் நேற்று முன்தினம் இரவு வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். நேற்று காலை விக்னேஷின் பெற்றோர்கள் அறையைத் திறந்து பார்த்தபோது அவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது. இதுகுறித்து விக்னேஷின் தந்தை ராமமூர்த்தி திமிரி போலீசில் புகார் செய்தார். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story