3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது
3 பேர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
புதுக்கோட்டை:
புதுக்கோட்டையை சேர்ந்தவர்கள் ஆகாஷ் (வயது 20), குருமூர்த்தி (24). கொலை வழக்கில் டவுன் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு நிஷா பார்த்திபன் பரிந்துரை செய்ததன் பேரில் கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். இதேபோல கொலை முயற்சி வழக்கில் திருமயம் போலீசாரால் கைது செய்யப்பட்ட பாப்பாத்தி ஊரணியை சேர்ந்த சதீஷ்குமார் (26) என்பவர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்க கலெக்டர் கவிதா ராமு உத்தரவிட்டார். அதன்படி மேற்கண்ட 3 பேர் மீதும் குண்டர் சட்டத்தில் நடவடிக்கை எடுக்கப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Related Tags :
Next Story