ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா


ராமநாதபுரம் வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா
x
தினத்தந்தி 10 March 2022 12:39 AM IST (Updated: 10 March 2022 12:39 AM IST)
t-max-icont-min-icon

ராமநாதபுரம் நகரின் புகழ் வாய்ந்த வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ராமநாதபுரம்
ராமநாதபுரம் நகரின் புகழ் வாய்ந்த வழிவிடுமுருகன் கோவில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
பங்குனி உத்திர திருவிழா
ராமநாதபுரம் நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ளது வழிவிடுமுருகன் கோவில். ஆண்டு தோறும் இந்த கோவிலில் பங்குனி உத்திரபெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். ராமநாதபுரம் நகரில் நடைபெறும் விழாக்களில் இந்த பங்குனி உத்திர திருவிழாவில் நகர்ப்பகுதி மட்டுமல்லாது சுற்றுவட்டார பகுதியை சேர்ந்த பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு தரிசனம் செய்வார்கள். 
இந்த கோவிலின் 82-வது பங்குனி உத்திர திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோவிலில் அமைந்துள்ள கொடிகம்பத்தில் விழாவையொட்டி கொடி ஏற்றப்பட்டு முருகபெருமானுக்கு பல்வேறு அபிஷேக ஆராதனை கள் நடைபெற்றன. தொடர்ந்து பங்குனி உத்திர விழாவில் விரதம் இருந்து காவடி, பால்குடம் எடுக்கும் பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் காப்புகட்டி விரதம் தொடங்கினர். 
பரத நாட்டியம்
இந்த நிகழ்ச்சியில் ஏராளமான சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு காப்புகட்டி கொண்டனர். இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழாவையொட்டி நாள்தோறும் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெறும். நாள்தோறும் கோவில் வளாகத்தில் சொற்பொழிவுகள், பரதநாட்டியம், வாரவழிபாடு, பக்தி இன்னிசை, சிலம்பாட்டம், இசை சங்கமம் நிகழ்ச்சிகள் நடைபெறும். விழாவின் முக்கிய நிகழ்வாக வரும் 18-ந் தேதி பங்குனி உத்திர பெருவிழா நடைபெறுகிறது.
அன்றையதினம் விரதம் இருந்துவரும் பக்தர்கள் நொச்சிவயல் பிரம்மபுரீஸ்வரர் ேகாவிலில் இருந்து காவடி, பால்குடம் எடுத்து வந்து முருகன் கோவிலில் செலுத்தி தங்களின் நேர்த்திக்கடனை செலுத்துவார்கள். இதில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்வார்கள். கோவில் முன்புறம் பிரமாண்டமான பூக்குழி இறங்கும் பக்தி பரவச நிகழ்ச்சி நடைபெறும். கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவல் காரணமாக பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்று வந்த நிலையில் இந்த ஆண்டு கொரோனா தொற்று குறைந்துள்ளதால் வழக்கமான உற்சாகத்துடன் பக்தர்கள் வெள்ளத்தில் பங்குனி உத்திர பெருவிழா நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 
பங்குனி உத்திர திருவிழா ஏற்பாடுகளை கோவில் தர்மகர்த்தா ஜெயக்குமார் தலைமையில் விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.

Next Story