மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற பதிவு செய்யும் முகாம்
ஆற்காட்டில் மாற்றுத்திறனாளிகள் தேசிய அடையாள அட்டை பெற பதிவு செய்யும் முகாம் நடந்தது.
ஆற்காடு
ஆற்காட்டில் உள்ள நெல், அரிசி வியாபாரிகள் திருமண மண்டபத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெறுவதற்கான பதிவு செய்யும் முகாம் நடந்தது. அதில் மாவட்ட கலெக்டர் பாஸ்கர பாண்டியன் பங்கேற்று தேசிய அடையாள அட்டைகளை வழங்கினார்.
மாற்றுத்திறனாளிகளை நேரில் சென்று பார்வையிட்டு, அவர்களின் குறைகளை கேட்டறிந்து, அதற்குண்டான நடவடிக்கைகள் எடுப்பதாக உறுதியளித்தார். அதில் ஆற்காடு ஜே.எல்.ஈஸ்வரப்பன் எம்.எல்.ஏ, நகரசபை தலைவர் தேவி பென்ஸ் பாண்டியன், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் சரவணகுமார், தாசில்தார் கோபாலகிருஷ்ணன், சமூக பாதுகாப்பு தாசில்தார் பாஸ்கரன், திமிரி ஒன்றிய குழு தலைவர் ரமேஷ் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story