மானிய விலையில் உரம் வழங்க வேண்டும். விவசாயிகள் கோரிக்கை
மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
அணைக்கட்டு
மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் என்று குறைதீர்வு கூட்டத்தில் விவசாயிகள் கோரிக்கை வைத்தனர்.
மானிய விலையில் உரம்
அணைக்கட்டு தாலுகா அலுவலகத்தில் விவசாயிகள் குறைதீர்வு நாள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு அணைக்கட்டு தாசில்தார் விநாயகமூர்த்தி தலைமை தாங்கினார். சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் விஜயகுமார், துணை தாசில்தார் திருக்குமரன், மண்டல துணை தாசில்தார் ராஜ்குமார், நில அளவையர் சதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வருவாய் ஆய்வாளர் விநாயகமூர்த்தி வரவேற்றார்.
கூட்டத்தில் பேசிய விவசாயிகள் தற்போது பருவமழை கை கொடுத்துள்ளதால் அனைத்து ஏரி குளங்கள் நிரம்பி, அதிகளவில் விவசாயிகள் பல்வேறு பயிர்களை செய்து வருகின்றனர். பயிர்களுக்கு அடி உரமாக போடப்படும் யூரியாவிற்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. 50 கிலோ கொண்ட ஒரு மூட்டை ரூ.270-க்கு விற்பனை செய்யப்பட்டது. தற்போது கள்ள மார்க்கெட்டில் 750 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. ஆகவே மானிய விலையில் யூரியாவை தட்டுப்பாடு இல்லாமல் விவசாயிகளுக்கு வழங்க வேண்டும்.
தானிய சேமிப்பு கிடங்கு
நெல், கம்பு, கேழ்வரகு உள்ளிட்ட தானியங்கள் இருப்பு வைக்க பள்ளிகொண்டா, ஒடுகத்தூர், அணைக்கட்டு, ஊசூர் ஆகிய பகுதிகளில் சேமிப்பு கிடங்கு அமைக்க வேண்டும். 100 நாள் வேலை திட்ட பணியாளர்களை, களை எடுத்தல், நாற்று நடுதல் உள்ளிட்ட பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும், 60 வயது முதிர்ந்த விவசாயிகளுக்கு மாத ஓய்வூதியம் வழங்கவேண்டும்.
சேக்கனூர், தெள்ளூர் பகுதிகளில் ஏரி கால்வாய்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளது. ஆக்கிரமிப்பை அகற்றி கால்வாயை தூர்வார வேண்டும்.
இவ்வாறு விவசாயிகள் பேசினர்.
Related Tags :
Next Story