ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர் தர்ணா


ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் துணைத்தலைவர் தர்ணா
x
தினத்தந்தி 10 March 2022 12:57 AM IST (Updated: 10 March 2022 12:57 AM IST)
t-max-icont-min-icon

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தனி இருக்கை வழங்காததால் துணைத்தலைவர் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டை ஒன்றியக்குழு கூட்டத்தில் தனி இருக்கை வழங்காததால் துணைத்தலைவர் தர்ணாபோராட்டத்தில் ஈடுபட்டார்.

ஒன்றியக்குழு கூட்டம்

ஜோலார்பேட்டை ஊராட்சி ஒன்றியக் குழு கூட்டம் ஒன்றியக்குழு தலைவர் எஸ்.சத்யா சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் வரவேற்றார். துணைத் தலைவர் ஸ்ரீதேவி காந்தி மற்றும் ஒன்றியக் குழு உறுப்பினர்கள் முன்னிலை வகித்தனர். 

கூட்டத்தில் ஒன்றிய கவுன்சிலர்கள் ஊராட்சிக்கு தேவையான பல்வேறு கோரிக்கைகளை முன் வைத்தனர். ஒன்றிய கவுன்சிலர் ஆ.கலா ஆஞ்சி அம்மையப்பன் நகர் ஊராட்சி கிழக்குப் பகுதியில் குடிநீர் சேறும், சகதியுமாக வருவதால், அப்பகுதியில் பழுதடைந்துள்ள 5 ஆழ்துளை கிணறுகள், 11 மினி டேங்குகளை சரி செய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மனு கொடுத்தார்.

தர்ணா போராட்டம்

கூட்டத்தில் ஒன்றியக் குழு  துணைத் தலைவர் ஸ்ரீதேவி காந்தி தனக்கு தனி நாற்காலி ஒதுக்கப்படவில்லை என கூறி வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகத்திடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். 

துணைத் தலைவருக்கு ஒன்றிய அலுவலகத்தில் உரிய நாற்காலி வழங்கப்படும் என கலெக்டர் தெரிவித்தும் அதற்கான நடவடிக்கை இதுவரை எடுக்கப்படவில்லை எனக் கூறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார். 

கூட்டம் முடிந்த பின்பும் அலுவலகத்துக்கு வெளியே அமர்ந்து தர்ணாவில் ஈடுபட்டார். இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம் உரிய பரிசீலனை செய்த பின்பு தங்களுக்கான தனி நாற்காலி வழங்கப்படும் என சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார். அதன்பிறகு அவர் அங்கிருந்து சென்றார்.

இருக்கை ஒதுக்காததால் ஒன்றியக் குழு துணைத் தலைவர் தர்ணாவில் ஈடுபட்ட சம்பவம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story