கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது.
சிதம்பரம்,
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்து தேவாரம் பாடுவதற்கு முயன்ற பெண்ணை தீட்சிதர்கள் திட்டி தடுத்து நிறுத்தி வெளியேற்றியதாக கூறப்படுகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படாமல் தடுக்கும் வகையில் சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடைபெற்றது. இதற்கு துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் தலைமை தாங்கினார். இதில் தாசில்தார் ஆனந்த், இன்ஸ்பெக்டர் ஆறுமுகம் மற்றும் மக்கள் அதிகாரம் அமைப்பின் மாவட்ட செயலாளர் பாலு, மற்றும் மே 17 இயக்கம், திராவிடர் விடுதலை கழகம், உள்ளிட்டபோராட்ட குழுவினர் கலந்து கொண்டனர். இதில் துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ராஜ் கூறுகையில், கோவிலில் தமிழில் தேவாரம் பாடுவதற்கு சட்டரீதியாக நடவடிக்கை எடுத்து அனைத்து மக்களும் பாடுவதற்கான ஏற்பாடுகள் வருகிற 25-ந்தேதிக்குள் எடுக்கப்படும். எனவே அது வரை போராட்டம் நடத்த வேண்டாம் என தெரிவித்தார். இதனை ஏற்று மக்கள் அதிகாரம் அமைப்பை சேர்ந்தவர்கள் உள்பட அனைவரும் கலைந்து சென்றனர்.
Related Tags :
Next Story