மது விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது
மது விற்ற 2 பெண்கள் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
வி.கைகாட்டி,
அரியலூர் மாவட்டம் கயர்லாபாத் சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தசாமி தலைமையிலான போலீசார் நேற்று ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது காட்டுப்பிரிங்கியம் அம்பேத்கர் நகரை சேர்ந்த ராமசாமி மனைவி செல்வி (வயது 50) என்பவர் அப்பகுதியில் டாஸ்மாக் மது பாட்டில்களை பதுக்கி கூடுதல் விலைக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. இதையடுத்து, செல்வியை போலீசார் கைது செய்தனர்.
இதேபோல் மீன்சுருட்டி அருகே உள்ள வளவனேரி மேலத் தெருவை சேர்ந்த பாலகிருஷ்ணன் (51), வடக்கு தெருவை சேர்ந்த ரவி (47), ஜெயங்கொண்டம் தோப்பேரி தெருவை சேர்ந்த பழனியம்மாள் (60) ஆகியோர் சட்டவிரோதமாக மது விற்றுக்கொண்டிருந்தனர். அவர்களை போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 46 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
Related Tags :
Next Story