காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல்
காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக பாதுகாப்பு கேட்டு போலீசில் அவா்கள் புகார் அளித்தனா்.
கடலூர்,
கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று ரஞ்சித்குமார் -எதித் காதல் தம்பதியினர் மாலையுடன் பாதுகாப்பு கேட்டு தஞ்சமடைந்தனர். பின்னர் எதித் (வயது 19), போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்தார். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:-
புதுச்சேரி மாநிலம் நெல்லித்தோப்பு பகுதியை சேர்ந்த நான், அங்குள்ள ஆசிரியர் பயிற்சி கல்லூரியில் இறுதி ஆண்டு படித்து வருகிறேன். நான் ரெட்டிச்சாவடி பகுதியை சேர்ந்த ரஞ்சித்குமார் என்பவரை காதலித்து வந்தேன். இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால், எனது பெற்றோர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வேறொரு இடத்தில் மாப்பிள்ளை பார்க்க தொடங்கினர்.
இதனால் நான், ரஞ்சித்குமாருடன் வீட்டை விட்டு வெளியேறி நேற்று வரக்கால்பட்டு வில்லுகட்டி அய்யனார் கோவிலில் திருமணம் செய்து கொண்டோம். இதுபற்றி அறிந்த எங்கள் இருவரது பெற்றோரும், செல்போனில் தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். அதனால் எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story