திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் இல்ல கட்டிடம் சீரமைக்கப்படுமா?
புதர்கள் மண்டி காணப்படும் திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் இல்ல கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருச்சிற்றம்பலம்:
புதர்கள் மண்டி காணப்படும் திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் இல்ல கட்டிடத்தை சீரமைத்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
வருவாய் ஆய்வாளர் இல்லம்
திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் இல்ல கட்டிடம் திருச்சிற்றம்பலம் செருவாவிடுதி சாலையில் உள்ளது. பல ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட இந்த கட்டிடம் முழுமையாக சேதம் அடைந்து உள்ளதால் அந்த கட்டிடத்தில் பணிபுரியும் வருவாய் ஆய்வாளர் தங்கி பணிபுரிய முடியாத நிலை உள்ளது. இதனால் கட்டிடத்தின் ஒரு பகுதி மட்டுமே அலுவலக பயன்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.
புதர்கள் மண்டி
தற்போது இந்த கட்டிடத்தை சுற்றி செடி, கொடிகள் வளர்ந்து புதர்கள் மண்டி
காணப்படுகிறது. மேலும் அலுவலகத்திற்கு செல்லும் சாலை மற்றும் அதன் வளாகம் முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மதுஅருந்தும் இடமாகவும் இந்த அலுவலக வளாகத்தை பயன்படுத்தி வருகின்றனர். அவ்வப்போது ஆய்வுக்கு வரும் வருவாய்த்துறை அதிகாரிகள் இதுகுறித்து நடவடிக்கை எடுக்கவில்லை.
சீரமைத்து தர வேண்டும்
எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் புதர்கள் மண்டி காணப்படும் திருச்சிற்றம்பலம் சரக வருவாய் ஆய்வாளர் இல்ல கட்டிடம் மற்றும் அலுவலக பகுதியை சீரமைத்து, கட்டிடத்தை சுற்றி வளர்ந்துள்ள செடி, கொடிகள் மற்றும் குப்பைகளை அகற்றி தர வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story