கைப்பந்து போட்டி


கைப்பந்து போட்டி
x
தினத்தந்தி 10 March 2022 1:54 AM IST (Updated: 10 March 2022 1:54 AM IST)
t-max-icont-min-icon

மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி

பனைக்குளம்
பொதுமக்கள்- காவல்துறை நல்லுறவை மேம்படுத்தும் வகையில் மாவட்டங்கள் தோறும் விளையாட்டுப் போட்டிகளை நடத்தி வெற்றி பெறும் வீரர்களுக்கு பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம். அதன்படி ராமநாதபுரம் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அறிவுரையின்படி, மாவட்ட அளவிலான கைப்பந்து போட்டி நடைபெற்றன. இதில் மாவட்ட துணை கண்காணிப்பாளர் ராஜா முன்னிலை வகித்தார். போட்டியை மாவட்ட ஊராட்சி கவுன்சிலரும் மூத்த வழக்கறிஞருமான ரவிச்சந்திர ராமவன்னி தலைமையேற்று தொடங்கி வைத்தார். இந்த போட்டியில் 24 அணிகள் கலந்து கொண்டன. இதில் ராமநாதபுரம் மாவட்டம் இருமேனி கிராமத்தை சேர்ந்த இஸ்லாமிய இளைஞர் பேரவை அணியினர் கலந்து கொண்டு முதல் பரிசை பெற்றனர். இந்த போட்டியில் திருப்பாலைக்குடி அணியினர் இரண்டாம் பரிசையும், ராமநாதபுரம் செய்யது அம்மாள் அறிவியல் மற்றும் கலை கல்லூரி அணியினர் மூன்றாம் பரிசையும் வென்றனர். வெற்றி பெற்ற அணியின் வீரர்களுக்கு கூடுதல் துணை கண்காணிப்பாளர் ஜெய்சிங் பரிசு வழங்கி பாராட்டினார்

Next Story