செஸ் போட்டியில் மாணவர் சாதனை


செஸ் போட்டியில் மாணவர் சாதனை
x
தினத்தந்தி 10 March 2022 1:55 AM IST (Updated: 10 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

மாநில அளவிலான செஸ் போட்டியில் அருப்புக்கோட்டை மாணவன் சாதனை படைத்தார்.

அருப்புக்கோட்டை, 
தென்காசியில் நடைபெற்ற மாநில அளவிலான செஸ் போட்டியில் அருப்புக்கோட்டை எஸ்.பி.கே. பள்ளி 11-ம் வகுப்பு மாணவன் ஆபிரகாம் ஜஸ்டின் 5 போட்டிகளில் வெற்றி பெற்று மாநில அளவில் 2-வது இடம் பெற்றார்.  அத்துடன் பணத்தொகை ஊக்கப்பரிசாக வழங்கப்பட்டது. சான்றிதழ் மற்றும் ஊக்கத்தொகையை தென்காசி மாவட்ட உடற்கல்வி ஆய்வாளர் நாராயணன் வழங்கினார். வெற்றி பெற்ற மாணவரை நாடார்கள் உறவின்முறை தலைவர் சுதாகர், பள்ளி செயலாளர் காசி முருகன், தலைவர் ஜெயகணேசன், தலைமை ஆசிரியர் ஆனந்தராஜன், உடற்கல்வி ஆசிரியர் சவுந்தரபாண்டியன் ஆகியோர் பாராட்டினர்.

Next Story