உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை: கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல்
உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை: கெட்டுப்போன 10 கிலோ மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருப்பத்தூர்,
திருப்பத்தூர் பகுதியில் உள்ள மீன் கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் அதிரடியாக ஆய்வு நடத்தி அங்கு கெட்டு போன நிலையில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 10 கிலோ மீன்களை பறிமுதல் செய்தனர்.
மீன்கடைகளில் ஆய்வு
சிவகங்கை மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி உத்தரவின் பேரிலும், மாவட்ட உணவு பாதுகாப்புத்துறை நியமன அலுவலர் டாக்டர் பிரபாவதி ஆலோசனையின் பேரில் திருப்பத்தூர் பகுதியில் உள்ள சில்லரை விற்பனை மீன்கள் கடைகளில் உணவு பாதுகாப்பு அலுவலர் தியாகராஜன் தலைமையில் உணவு பாதுகாப்புத்துறை அலுவலர்கள் திடீர் ஆய்வு நடத்தினர்.
திருப்பத்தூர் அண்ணாசிலை பகுதி, பஸ் நிலைய பகுதி உள்ளிட்ட பல்வேறு பகுதியில் உள்ள மீன்கடைகளில் நடத்திய ஆய்வின் போது அங்கு கெட்டுப்போன நிலையில் சுமார் 10 கிலோ மீன்கள் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து அந்த கெட்டுப்போன நிலையில் உள்ள மீன்கள் பறிமுதல் செய்து அழிக்கப்பட்டது.
அதிகாரிகள் ஆய்வு
மேலும் இந்த மீன்களை விற்பனைக்காக வைத்திருந்த வியாபாரிகளுக்கு கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இதேபோல் திருப்பத்தூர் பகுதியில் உள்ள மளிகை கடைகள், டீக்கடைகள் உள்ளிட்ட கடைகளில் உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். அங்கு பயன்பாட்டிற்காக இருந்த சுமார் 2 கிலோ எடையுள்ள பிளாஸ்டிக் பைகள் பறிமுதல் செய்யப்பட்டு கடை உரிமையாளர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டது.
இந்த ஆய்வின் போது சிவகங்கை மாவட்ட மீன்வள ஆய்வாளர் சோபியா, மீன் வள மேற்பார்வையாளர் கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மீன் வியாபாரிகளுக்கு தரமான உணவு பொருட்கள் வழங்குவது குறித்த விழிப்புணர்வு செய்தனர்.
Related Tags :
Next Story