காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்-கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு


காவிரி கூட்டுக்குடிநீர் திட்ட பணிகள்-கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு
x
தினத்தந்தி 10 March 2022 1:55 AM IST (Updated: 10 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1,752 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

சிவகங்கை, மார்ச்.10-
சிவகங்கை மாவட்டத்தில் ரூ.1,752 கோடி மதிப்பில் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 
குடிநீர் திட்ட பணி
சிவகங்கை மாவட்டத்திலுள்ள 8 பேரூராட்சிகள், 2,452 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கு குடிநீர் வழங்க 1,752 கோடி மதிப்பில் செயல்படுத்தபட்டு வரும் காவிரி கூட்டு குடிநீர் திட்ட பணிகளை கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்
சிவகங்கையை அடுத்த காளையார்மங்கலம், எருமைப்பட்டி, தேன்னம்மாள்பட்டி ஆகிய கிராமப்புற பகுதிகளில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் நடைபெற்று வரும் காவிரி கூட்டுக் குடிநீர்; திட்டப்பணிகளை மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் கூறியதாவது:-
பாதுகாக்கப்பட்ட குடிநீரினை பொதுமக்களுக்கு வழங்கிட வேண்டும் என்பதை கருத்தில் கொண்டு, தமிழக அரசால் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. 
அதன்படி, சிவகங்கை மாவட்டத்தில் அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு சீரான குடிநீர் வழங்கும் பொருட்டு தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் ரூ.1,752 கோடியே 73 லட்சம் மதிப்பில் மாவட்டத்திலுள்ள 8 பேரூராட்சிகள், 2,452 ஊரக குடியிருப்புகள் மற்றும் 3 நகராட்சிகளுக்கு குளித்தலை அருகில் காவிரி ஆற்றை நீராதாரமாகக் கொண்டு கூட்டுக் குடிநீர் திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது. 
இத்திட்டம் நான்கு பகுதிகளாக பிரிக்கப்பட்டு. 36 மாதங்களில் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. தற்போது 37 சதவீத பணிகள் முடிவுற்று மீதப்பணிகள் நடைபெற்று வருகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி 
பின்னர் இந்த திட்டத்தின் பகுதி 3-ல் காளையார்மங்கலத்தில் அமைக்கப்பட்டு வரும் 2 லட்சத்து 80 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி கட்டும் பணி மற்றும் எருமைப்பட்டி கிராமத்தின் அருகில் நடைபெற்று வரும் 914 மி.மீ. விட்டமுள்ள இரும்பு குழாய்கள் பதிக்கும் பணி மற்றும் பகுதி-2-ல் சிங்கம்புணரி ஒன்றியம் தேனம்மாள்பட்டியில் அமைக்கப்பட்டு வரும் 146 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட பிரதான தரைமட்ட நீர்த்தேக்கத்தொட்டி கட்டுமானப்பணிகள் கலெக்டர் பார்வையிட்டார். 
ஆய்வின்போது, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் சிவகங்கை- ராமநாதபுரம் வட்டம் மற்றும் திட்ட பராமரிப்பு வட்ட மேற்பார்வைப் பொறியாளர் குணசேகர், சிவகங்கை திட்டக்கோட்ட நிர்வாகப்பொறியாளர் ரவிச்சந்திரன், காரைக்குடி திட்டக்கோட்ட நிர்வாகப்பொறியாளர் ஜீவலதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Next Story