நசுவினி ஆற்றில் கிடந்த 2 அடி உயர வேல்


நசுவினி ஆற்றில் கிடந்த 2 அடி உயர வேல்
x
தினத்தந்தி 10 March 2022 1:55 AM IST (Updated: 10 March 2022 1:55 AM IST)
t-max-icont-min-icon

ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நசுவினி ஆற்றில் 2 அடி உயர வேல் கிடந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கரம்பயம்:
ஆத்திக்கோட்டை ஊராட்சியில் நசுவினி ஆற்றில் 2 அடி உயர வேல் கிடந்தது. இதுகுறித்து வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.  
நசுவினி ஆற்றில் கிடந்த வேல்
பட்டுக்கோட்டை ஊராட்சி ஒன்றியம் ஆத்திக்கோட்டை ஊராட்சியில்  நசுவினி ஆற்றுப்பாலம் உள்ளது. இங்கு  மழைக்காலம் முடிந்த பிறகு பலர் தூண்டில் போட்டு மீன் பிடிப்பதும், வலை வைத்து மீன் பிடிப்பதும் வழக்கம். இந்தநிலையில் நேற்று தளிக்கோட்டை கிராமத்தை சேர்ந்த காமராஜ் (வயது 51) என்பவர் மீன்பிடி வலைகளை கொண்டு வந்து நசுவினி ஆற்றின் குறுக்கே கட்டி இருந்தார். பின்னர் ஆற்றில் இறங்கி  வலையை எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது   ஏதோ காலில் குத்தியுள்ளது. அதனை எடுத்து பார்த்த போது வேல் என்பது தெரியவந்தது. இதனை எடுத்து கொண்டு தனது வீட்டில் காமராஜ் வைத்திருந்தார். இதுகுறித்து தகவல் அறிந்ததும் தளிக்கோட்டை கிராம நிர்வாக அலுவலர் ஆறுமுகம், வருவாய் ஆய்வாளர் சாந்தி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து காமராஜிடம் இருந்த 2 அடி உயர வேலை கைப்பற்றினர். பின்னர் அந்த வேலை அவர்கள் பட்டுக்கோட்டை தலைமையிடத்து கூடுதல் துணை தாசில்தார் கிருஷ்ணமூர்த்தியிடம் ஒப்படைத்தனர். 
வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை 
இந்த வேல் செம்பால் ஆனதா? அல்லது ஐம்பொன்னால் ஆனதா? என்பது என்பது தெரியவில்லை. தற்போது இந்த வேல் பட்டுக்கோட்டை தாசில்தார் அலுவலகத்தில் உள்ள பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டுள்ளது. இந்த வேலை யாராவது கோவிலில் இருந்து திருடி ஆற்றில் வீசி உள்ளார்களா? என வருவாய்த்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். 

Next Story