தஞ்சையில் கல்லணைக்கால்வாய் பாலம் இடிப்பு
தஞ்சை கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன்பாலம் நேற்று இடிக்கப்பட்டது. இங்கு ரூ.3 கோடியில் புதிதாக பாலம் கட்டப்படுவதையொட்டி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி தஞ்சையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டது.
தஞ்சாவூர்:
தஞ்சை கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன்பாலம் நேற்று இடிக்கப்பட்டது. இங்கு ரூ.3 கோடியில் புதிதாக பாலம் கட்டப்படுவதையொட்டி இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டன. இதையொட்டி தஞ்சையில் போக்குவரத்தும் மாற்றம் செய்யப்பட்டது.
4 புதிய பாலங்கள்
தஞ்சை கரந்தையில் போக்குவரத்து கழக பணிமனை அருகே வடவாறு பாலம் உள்ளது. மிகவும் குறுகலான இந்த பாலம் பழுதடைந்து காணப்பட்டது. இதையடுத்து புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது. இதே போல் தஞ்சை காந்திஜி சாலையில் கல்லணைக்கால்வாயில் உள்ள இர்வீன் பாலமும் பழமை வாய்ந்த பாலம் என்பதால் அங்கும் புதிய பாலம் கட்ட முடிவு செய்யப்பட்டது.
தற்போதுள்ள பழைய பாலங்களுக்கு மாற்றாக கல்லணைக்கால்வாயிலும், வடவாறிலும், இரு வழித்தட அகலம் கொண்ட 4 புதிய உயர்மட்ட பாலங்கள் கட்டப்படுகின்றன. கல்லணைக்கால்வாயில் 2 பாலமும், வடவாற்றில் 2 பாலமும் என தலா ரூ.1½ கோடி என ரூ.6 கோடியில் கட்டப்படுகிறது.
இடிக்கும் பணி தொடக்கம்
இதையடுத்து இந்த 2 பாலங்களும் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி முதல் கட்டமாக கல்லணைக் கால்வாய் ஆற்றுப் பாலத்தில் (இர்வின் பாலம்) கட்டுமானப் பணி நடைபெறுவதால் நேற்று முதல் இர்வின் பாலம் மூடப்பட்டு, போக்குவரத்து முற்றிலும் தடை செய்யப்பட்டது.
இதையடுத்து பாலம் இடிக்கும் பணிகளும் தொடங்கின. 2 பொக்லின் எந்திரம் மூலம் பாலம் இடிக்கும் பணிகள் தொடங்கியது. இதையடுத்து அனைத்து வாகனங்களும் பழைய கோர்ட்டு சாலை, பெரியகோயில் சாலை, சோழன் சிலை வழியாக அண்ணா சிலைக்கு வந்து செல்லும் வகையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
போக்குவரத்து மாற்றம்
இதேபோல வடவாறு பாலத்திலும் விரைவில் மூடப்பட்டு போக்குவரத்து மாற்றம் செய்யப்படவுள்ளது. வடவாறு பாலம் மூடப்படுதையொட்டி மாற்றுப்பாதையில் வாகனங்கள் செல்வதற்காக சாலை சீர் செய்யும் பணிகள் நிறைவடையவில்லை. இதனால் இன்னும் ஓரிரு நாட்களில் இந்த பாலமும் மூடப்பட்டு இடிக்கும் பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த 4 பாலங்களும் 3 மாதத்தில் கட்டி முடிக்கும் வகையில் நெடுஞ்சாலைத்துறையினர் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர். இப்பாலப் பணிகள் ஜூன் மாதம் இரண்டாவது வாரத்துக்குள் கட்டி முடிக்கப்பட்டு, பொதுமக்கள் பயன்பாட்டுக்குத் திறக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story