மாங்காய் சீசன் தொடங்கியது; சேலத்தில் விளைச்சல் அதிகரிப்பு


மாங்காய் சீசன் தொடங்கியது; சேலத்தில் விளைச்சல் அதிகரிப்பு
x
தினத்தந்தி 10 March 2022 2:13 AM IST (Updated: 10 March 2022 2:13 AM IST)
t-max-icont-min-icon

மாங்காய் சீசன் தொடங்கியதால் சேலத்தில் மாங்காய் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.

சேலம்:-
மாங்காய் சீசன் தொடங்கியதால் சேலத்தில் மாங்காய் விளைச்சல் அதிகரிக்க தொடங்கியுள்ளது.
மாம்பழம்
சேலம் மாவட்டத்தில் அயோத்தியாப்பட்டணம், வரகம்பாடி, அடிமலைப்புதூர், வாழப்பாடி, ஆத்தூர், நங்கவள்ளி, மேச்சேரி, தாரமங்கலம், இளம்பிள்ளை, சங்ககிரி உள்ளிட்ட பகுதிகளிலும், தர்மபுரி, கிருஷ்ணகிரி ஆகிய மாவட்டங்களிலும் மாமரங்கள் அதிகளவில் உள்ளன. இங்கு சேலம் மல்கோவா, செந்தூரா, பெங்களூரா, அல்போன்சா, இமாம்பசந்த், நடுசாலை, பங்கனப்பள்ளி போன்ற மாங்காய்கள் அதிகளவில் விளைகிறது.
விளைச்சல் அதிகரிப்பு
கடந்த ஆண்டில் டிசம்பர் மற்றும் கடந்த ஜனவரி மாதங்களில் பெய்த பருவம் தவறிய மழையால் மாமரங்களில் பூக்கள் பூப்பதில் தாமதம் ஏற்பட்டது. இதனால் மார்க்கெட்டில் மாங்காய்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டது. தற்போது சற்று தாமதமாக கிளிமூக்கு மாங்காய் மட்டும் விற்பனைக்கு வந்துள்ளது. சிறிய மாங்காய் ஒன்று ரூ.35-க்கும், பெரிய மாங்காய் ரூ.50-க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இருப்பினும் மாங்காய் பிரியர்கள் அதை ஆர்வமுடன் வாங்கி செல்வதை காணமுடிகிறது.
சேலம் மாநகரில் அஸ்தம்பட்டி, சூரமங்கலம், தாதகாப்பட்டி, அம்மாபேட்டை ஆகிய உழவர் சந்தைகள் முன்பு வியாபாரிகள் மாங்காய்கள் விற்பனை செய்து வருகிறார்கள். இதுதவிர, சாலையோர வியாபாரிகள் சிலரும் மாங்காய் விற்பனையிலும் ஈடுபட்டு வருகின்றனர்.
மாம்பழ சீசன்
இதுகுறித்து சேலத்தை சேர்ந்த மாங்காய் வியாபாரிகள் கூகையில், சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் மாங்காய் விளைச்சல் தொடங்கியுள்ளதால் சில வியாபாரிகள் மாந்தோப்புகளில் முகாமிட்டு அதன் உரிமையாளர்களிடம் பேசி ஆர்டர் செய்து வருகிறார்கள். சேலத்தில் உள்ள தினசரி சந்தைகள் மற்றும் உழவர் சந்தைகளுக்கு கிளிமூக்கு மாங்காய்கள் மட்டும் விற்பனைக்கு வருகிறது என்றனர்.

Next Story