பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கைதி கோர்ட்டில் சரண்
சேலத்தில் பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்ட கைதி, கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார்.
சேலம்:-
சேலம் ரெட்டியூரை சேர்ந்தவர் தினேஷ்குமார் (வயது 26). பொது சொத்துக்கு சேதம் விளைவித்ததாக அழகாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து கடந்த 2017-ம் ஆண்டு தினேஷ்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் ஜாமீனில் வெளியே வந்த அவர் தலைமறைவானார். இதையடுத்து தினேஷ்குமாருக்கு பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டது. தினேஷ்குமார் நேற்று 3-வது கூடுதல் அமர்வு கோர்ட்டில் சரண் அடைந்தார். அவரை வருகிற 17-ந்தேதி வரை சிறையில் அடைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதையடுத்து தினேஷ்குமாரை போலீசார் சேலம் மத்திய சிறையில் அடைத்தனர்.
Related Tags :
Next Story