கரும்பு ெவட்டும் தொழிலாளி பலி


கரும்பு ெவட்டும் தொழிலாளி பலி
x
தினத்தந்தி 10 March 2022 2:42 AM IST (Updated: 10 March 2022 2:42 AM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள் மரத்தில் மோதியதில் கரும்புவெட்டும் தொழிலாளி பரிதாபமாக இறந்தார்.

எடப்பாடி:"-
எடப்பாடியை அடுத்த அரசிராமணி எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வருபவர் மாதையன். இவருடைய மகன் பிரபு (வயது 32), கரும்பு வெட்டும் தொழிலாளி.  நேற்று பிரபு வெள்ளையன்பாளையத்துக்கு உறவினர் ஒருவரை ெகாண்டு விட மோட்டார் சைக்கிளில் ெசன்றார். உறவினரை அவரது வீட்டில் இறக்கி விட்டு விட்டு எடப்பாடிக்கு திரும்பி வந்து கொண்டிருந்தாா். கொங்கணாபுரத்தை அடுத்த கூத்தாடிபாளையம் பகுதியில் வந்த போது பிரபுவின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரத்தில் உள்ள புளியமரத்தில் எதிர்பாராதவிதமாக மோட்டார் சைக்கிள் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பிரபு பலத்த காயமடைந்தார். உடனே அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து கொங்கணாபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். விபத்தில் பலியான பிரபுவுக்கு, மனைவியும், 2 பெண் குழந்தைகளும் உள்ளனர்.

Next Story