ஓடும் ரெயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வாலிபர் கைது


ஓடும் ரெயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 10 March 2022 2:46 AM IST (Updated: 10 March 2022 2:46 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் ரெயிலில் பயணிகளிடம் கொள்ளையடித்த வாலிபர் கைது செய்யப்பட்டார்

உப்பள்ளி: தார்வார் மற்றும் உப்பள்ளியில் ஓடும் ரெயில் பயணிகளிடம் கத்தியை காட்டி மிரட்டி பணம், நகைகள் கொள்ளையடிக்கப்பட்டு வந்தது. இதுகுறித்து ரெயில்வே போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அவர்கள் தனிப்படை அமைத்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் கடந்த மாதம் 23-ந் தேதி இரவு பெலகாவி-பெங்களூரு ரெயிலில் பயணித்த தார்வாரைச் சேர்ந்த பெடசூா் என்பவரை கத்தியால் தாக்கிய மர்ம நபர்கள், ரூ.10 ஆயிரம் ரொக்கம் மற்றும் செல்போனை கொள்ளையடித்துக் கொண்டு இலவிகி ரெயில் நிலையத்தில் இறங்கி தப்பியோடிவிட்டனர். 

இதுகுறித்து உப்பள்ளி-தார்வார் ரெயில்வே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. வழக்கு பதிவு செய்த போலீசார் கடந்த சில வாரங்களாக தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நடந்த சோதனையில் ஆயுதங்களுடன் ரெயிலில் நடமாடிய நபர் ஒருவரை போலீசார் மடக்கி பிடித்து விசாரித்தனர். அதில் அவர் பழைய உப்பள்ளி நூராணி கிரவுண்ட் பகுதியை சேர்ந்த  கலா அப்துல் ரஜாக் முல்லா (வயது 30) என்று தெரியவந்தது. இவர் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து ரெயில் பயணிகளை ஆயுதங்களால் தாக்கி கொள்ளையில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story