சோனியாகாந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு:நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு


சோனியாகாந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு:நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு
x
தினத்தந்தி 10 March 2022 2:51 AM IST (Updated: 10 March 2022 2:51 AM IST)
t-max-icont-min-icon

சோனியாகாந்தி குறித்து சமூக வலைத்தளங்களில் அவதூறு பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க மதுரை ஐகோர்ட்டு உத்தரவு பிறப்பித்து உள்ளது.

மதுரை, 

மதுரை உசிலம்பட்டியை சேர்ந்த காந்தி சரவணன் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-
காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தியின் புகைப்படத்தை பயன்படுத்தி சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்கள் பரப்பப்படுகின்றன. இந்த தகவல்களை சமூக வலைத்தளத்தில் இருந்து நீக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பதிவுத்தபால் மூலம் புகார் செய்தேன். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மேலும் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் மீது அவதூறு பரப்பும் விதமாக சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்கள் பரவி வருகின்றன. அவற்றை உடனடியாக நீக்க உத்தரவிட வேண்டும். அவதூறான தகவல்களை பரப்பி வருவோர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டிருந்தது.
இந்த மனு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணைக்கு வந்தது. விசாரணையின் முடிவில், உசிலம்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர், இதுகுறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி நீதிபதி உத்தரவிட்டார

Next Story