ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறிப்பு; மோட்டார்சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் கைவரிசை
ரோட்டில் நடந்து சென்ற பெண்ணிடம் தங்க சங்கிலி பறித்துவிட்டு மோட்டாா்சைக்கிளில் வந்த மா்மநபா்கள் தப்பித்து சென்றனா்.
பெருந்துறை
பெருந்துறை குன்னத்தூர் ரோடு, உப்பிலியர் வீதியை சேர்ந்தவர் குமார். இவருடைய மனைவி ரம்யாதேவி (வயது 39). கூலித்தொழிலாளி. நேற்று முன்தினம் மாலை வேலை முடிந்து வீட்டுக்கு ரம்யாதேவி நடந்து சென்று கொண்டிருந்தார். உப்பிலியர் வீதி அருகே சென்றபோது அந்த வழியாக மோட்டார்சைக்கிளில் வந்த 2 பேரில் ஒருவர் திடீரென ரம்யாதேவி கழுத்தில் அணிந்திருந்த தங்க சங்கிலியை பறித்தார். இதில் சுதாரித்து கொண்ட ரம்யாதேவி தன்னுடைய சங்கிலியை 2 கைகளாலும் இறுக்க பிடித்துக்கொண்டார். இதனால் சங்கிலியின் சிறு பகுதி அந்த மர்ம நபரின் கைகளில் சிக்கி கொண்டது. சிக்கிய சிறிய பகுதி தங்க சங்கிலியுடன், மர்ம நபர்கள் 2 பேரும் மோட்டார்சைக்கிளில் அங்கிருந்து தப்பினர். இதுகுறித்த புகாரின்பேரில் பெருந்துறை போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.
Related Tags :
Next Story