குட்கா கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் கைது


குட்கா கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் கைது
x
தினத்தந்தி 10 March 2022 5:04 PM IST (Updated: 10 March 2022 5:04 PM IST)
t-max-icont-min-icon

குட்கா கடத்தல் வழக்கில் தேடப்பட்டவர் கைது செய்யப்பட்டார்.

தர்மபுரி:
தர்மபுரி மாவட்டம் அதியமான் கோட்டை அருகே கடந்த ஜனவரி மாதம் 11-ந்தேதி அதியமான் கோட்டை போலீசார் நடத்திய வாகன சோதனையில் கன்டெய்னர் லாரியில் ரகசிய அறை வைத்து 800 கிலோ குட்கா கடத்தி செல்வது தெரியவந்தது. இதையடுத்து அந்த கன்டெய்னர் லாரியில் இருந்த ரூ.5 லட்சம் மதிப்புள்ள குட்காவை போலீசார் பறிமுதல் செய்தனர். இந்த கடத்தல் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பெரியாம்பட்டி பகுதியை சேர்ந்த சரவணன் (வயது 39) என்பவரை போலீசார் தீவிரமாக தேடி வந்தனர். இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சரவணனை அதியமான் கோட்டை போலீசார் கைது செய்தனர்.
---

Next Story