தனியார் பள்ளியில் இருந்து மாயமான 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்
தனியார் பள்ளியில் இருந்து மாயமான 2 மாணவிகளை 5 மணி நேரத்தில் போலீசார் மீட்டனர்.
தர்மபுரி:
தர்மபுரி அடுத்த பழைய தர்மபுரியில் தனியார் மேல்நிலைப்பள்ளி இயங்கி வருகிறது. இங்கு 7-ம் வகுப்பு படிக்கும் பாலக்கோடு மற்றும் காரிமங்கலம் பகுதியைச் சேர்ந்த 2 மாணவிகள் நேற்று முன்தினம் பிற்பகலில் பள்ளி வளாகத்தில் இருந்து திடீரென மாயமானார்கள். இதுபற்றி தகவல் அறிந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் அன்று மாலையில் பள்ளி வளாகத்தில் திரண்டனர். தகவலறிந்து அங்கு வந்த போலீசார் மாணவிகளை தேடும் பணியில் ஈடுபட்டனர். இந்தநிலையில் 5 மணி நேரத்திற்கு பின் நேற்று முன்தினம் இரவு குண்டல்பட்டி பகுதியில் அந்த 2 மாணவிகளும் மீட்கப்பட்டு பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டனர். மாணவிகள் திடீரென பள்ளிக்கூடத்தில் இருந்து மாயமானதற்கு என்ன காரணம்? என்பது குறித்து பெற்றோர் மற்றும் பள்ளி நிர்வாகத்திடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story