டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2022 5:23 PM IST (Updated: 10 March 2022 5:23 PM IST)
t-max-icont-min-icon

பணி நிரந்தரம் செய்யக்கோரி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்

திருவண்ணாமலை

டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளத்தின் சார்பில் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்யக் கோரி திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது. 

ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட தலைவர் மார்கண்டன் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் வெங்கடேசன், பொருளாளர் சக்கரவர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். 

சிறப்பு அழைப்பாளராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சி மாவட்ட செயலாளர் சிவக்குமார், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் பாரி, துணைத் தலைவர் வீரபத்திரன் உள்பட பலர் கலந்து கொண்டு கோஷங்கள் எழுப்பினர். 

ஆர்ப்பாட்டத்தில் டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சிமுறை பணியிட மாறுதல் கொள்கை உருவாக்க வேண்டும். கவுன்சிலிங் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் பொதுப்பணியிட மாறுதல் வழங்க வேண்டும். 

முறையற்ற பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். 19 ஆண்டுகளாக பணியாற்றி வரும் டாஸ்மாக் ஊழியர்களை பணிநிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் உள்ளிட்ட அரசு ஊழியருக்கு இணையான அனைத்து சலுகைகள் வழங்க வேண்டும்.

 கொரோனா தொற்று பரவல் தடுப்பு ஏற்பாடு செலவினங்கள் மற்றும் கடை வெள்ளையடித்தல் உள்ளிட்ட பராமரிப்பு செலவின தொகையினை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினர். இதில் டாஸ்மாக் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Next Story