குரியனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா-மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம்


குரியனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா-மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம்
x
தினத்தந்தி 10 March 2022 5:48 PM IST (Updated: 10 March 2022 5:48 PM IST)
t-max-icont-min-icon

குரியனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில் மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம் அடைந்தனர்.

வேப்பனப்பள்ளி:
குரியனப்பள்ளி கிராமத்தில் எருது விடும் விழா நேற்று நடைபெற்றது. இதில் 250-க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில் மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம் அடைந்தனர்.
எருது விடும் விழா
கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே உள்ள குரியனப்பள்ளி கிராமத்தில் ஆண்டுதோறும் எருது விடும் விழா நடைபெறுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான எருதுவிடும் விழா நேற்று நடைபெற்றது. 
இதில் வேப்பனப்பள்ளி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த சூளகிரி, பேரிகை, பாகலூர், ராயக்கோட்டை, கெலமங்கலம், கிருஷ்ணகிரி, ஓசூர் மற்றும் அண்டை மாநிலங்களான கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் இருந்து 250-க்கும் மேறப்பட்ட காளைகள் பங்கேற்றன. 
காலை 8 மணிக்கு தொடங்கிய எருது விடும் விழா காலை 11 மணி வரை நடைபெற்றது. இதில் காளைகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருந்த பட்டங்களை எடுக்க வாலிபர்களும், மாடுபிடி வீரர்களும் போட்டி போட்டுக்கொண்டு களத்தில் நின்றனர். 
10 பேர் காயம்
இதில் காளையர்களை முட்டிகொண்டு மின்னல் வேகத்தில் காளைகள் சீறிப்பாய்ந்து சென்றன. காளைகளை பிடிக்க முயன்ற மாடுபிடி வீரர்களை காளைகள் முட்டி பந்தாடியது. இந்த விழாவை காண சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் ஏராளமான பொதுமக்கள் கலந்து கொண்டனர். இதில் காளைகள் முட்டியதில் மாடுபிடி வீரர்கள் 10 பேர் காயம் அடைந்தனர். எருது விடும் விழாவையொட்டி போலீசார் தீவிர பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.


Next Story