குலசேகரன்பட்டினம் அருகே 11 ஆடுகள் திருட்டு
குலசேகரன்பட்டினம் அருகே 11 ஆடுகள் திருடிய மர்மநபர்களை போலீசார் தேடிவருகின்றனர்
குலசேகரன்பட்டினம்:
குலசேகரன்பட்டினம் அருகே உள்ள அமராபுரம் அம்மன் கோவில் தெருவை சேர்ந்த சுப்பையா கோனார் மகன் பேச்சிமுத்து (வயது50). விவசாய கூலி வேலை செய்து வருகிறார். பேச்சிமுத்து சொந்தமாக 80 ஆடுகள் வளர்த்து வியாபாரம் செய்து வருகிறார். கடந்த 7-தேதி இரவு தனது ஆடுகளை அமராபுரம் பஸ் ஸ்டாப்புக்கு தெற்கே உள்ள உடங்காட்டில் பட்டியில் அடைத்து விட்டு வீட்டுக்கு வந்துள்ளார். மறுநாள் காலை 5 மணிக்குசென்று பார்த்தபோது பட்டியில் 11 ஆடுகளை காணவில்லை. நள்ளிரவில் மர்மநபர்கள் அந்த ஆடுகளை திருடி ெசன்றது தெரிய வந்தது.
இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் குலசேகரன்பட்டினம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முனியாண்டி வழக்குப்பதிவு செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகிறார்.
Related Tags :
Next Story