காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறப்பு
காவேரிப்பாக்கம் ஒன்றியத்தில் 4 நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டது.
காவேரிப்பாக்கம்
ராணிப்பேட்டை மாவட்டம் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் 29 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள விவசாயிகள் தற்போது சம்பா பருவத்தில் அறுவடை செய்து வருகின்றனர். இதன் காரணமாக மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் தமிழக அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் அமைக்கப்பட்டு விவசாயிகள் பயன் பெற்று வருகின்றனர். இந்தநிலையில் காவேரிப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் ஆயர்பாடி, சிறுவளையம், பாணாவரம், சிறுகரும்பூர் என 4 இடங்களில் நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் நேற்று திறக்கப்பட்டன. இதனால் இப்பகுதியில் அதிக அளவில் நெல் மூட்டைகள் குவிய தொடங்கியுள்ளது.
Related Tags :
Next Story