கடைகளில் மராத்தி பெயர் பலகை கட்டாயம்
கடைகளில் மராத்தி பெயர் பலகையை கட்டாயமாக்கி சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.
மும்பை,
கடைகளில் மராத்தி பெயர் பலகையை கட்டாயமாக்கி சட்டசபை ஒப்புதல் அளித்துள்ளது.
பெயர் பலகை
மராட்டியத்தில் கடைகளின் பெயர் பலகைகள் மராட்டியில் இருக்க வேண்டும் என 2017-ம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால் 10 ஊழியர்களுக்கு குறைவாக உள்ள கடைகள் இதை பின்பற்றவில்லை.
இதேபோல பெரும்பாலான கடைகளில் ஆங்கிலத்தில் பெயர் பெரிதாக எழுதப்பட்டு, மராத்தி சிறியதாக எழுதப்பட்டு இருக்கிறது.
உத்தரவு
இந்தநிலையில் எல்லா கடைகளிலும் பெயர் பலகை மராத்தியில் இருக்க வேண்டும் என மாநில அரசு உத்தரவிட்டது. மேலும் மற்ற மொழிகளை காட்டிலும் மராத்தி பெயர் பெரியதாக இருக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டது.
இதுதொடர்பான சட்டத்திருத்தத்திற்கு சட்டசபை ஒப்புதல் அளித்து உள்ளது. மும்பை மாநகராட்சி தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் மாநில அரசின் இந்த சட்டத்திருத்தம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.
----
Related Tags :
Next Story