இரவு 10 மணிக்கு மேல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் கட்டுமான அதிபர்களுக்கு போலீஸ் கமிஷனர் உத்தரவு
இரவு 10 மணிக்கு மேல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என கட்டுமான அதிபர்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
மும்பை,
இரவு 10 மணிக்கு மேல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என கட்டுமான அதிபர்களுக்கு மும்பை போலீஸ் கமிஷனர் சஞ்சய் பாண்டே உத்தரவிட்டுள்ளார்.
10 மணிக்கு மேல் வேண்டாம்
மும்பை போலீஸ் கமிஷனராக சஞ்சய் பாண்டே கடந்த வாரம் பொறுப்பேற்று கொண்டார். அவர் கடந்த சில நாட்களுக்கு முன் முகநூல் நேரலையில் பேசிய போது, நகருக்கு கட்டுமான பணிகள் முக்கியம் என்றாலும் பொது மக்கள் இரவு மற்றும் ஞாயிற்றுகிழமைகளிலாவது சத்தம் இல்லாமல் இருக்க வேண்டும் என்றார்.
இந்தநிலையில் அவர் நேற்று நகரில் உள்ள முக்கியமான கட்டுமான அதிபர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர், இரவு 10 மணிக்கு மேல் கட்டுமான பணிகளை மேற்கொள்ள வேண்டாம் என்றார்.
நேர, கால பலகை
மேலும் அவர் கட்டுமான அதிபர்களிடம், " உங்களது காவலாளிகளுக்கு போக்குவரத்து போலீஸ்காரர் போன்ற சீருடையை கொடுக்க வேண்டாம். இதேபோல காவலாளிகள் கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தில் தான் பணியில் இருக்க வேண்டும். சாலைகளுக்கு வரக்கூடாது. இதேபோல கட்டுமான பணிகளால் பொது மக்கள் பாதிக்கப்படக்கூடாது.
எனவே கட்டுமான பணிகள் நடைபெறும் இடத்தை சுற்றி தடுப்புகள் அமைக்கப்பட்டு இருக்க வேண்டும். இதேபோல கட்டுமான பணிகள் நடைபெறும் நேரம், கால விவரங்கள் அடங்கிய பலகையை வைக்க வேண்டும் " என்று கூறினார்.
Related Tags :
Next Story