பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 10 March 2022 8:41 PM IST (Updated: 10 March 2022 8:41 PM IST)
t-max-icont-min-icon

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர்கள் ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஊட்டி

டாஸ்மாக் கடை ஊழியர்களுக்கு  கொரோனா பரவல் தடுப்பு செலவின தொகையை முழுமையாக வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனம் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம் சார்பில் ஊட்டி ஏ.டி.சி. திடல் முன்பு  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. 

ஆர்ப்பாட்டத்துக்கு நீலகிரி மாவட்ட செயலாளர் மகேஷ் தலைமை தாங்கினார். ஆர்ப்பாட்டத்தில் 10 ஆண்டுகள் பணிபுரிபவர்களை பணி நியமனம் செய்ய வேண்டும். 

நீலகிரியில் இரவு பணி நேரம் குறைக்க மாவட்ட நிர்வாகம் பரிந்துரை செய்ய வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பி வலியுறுத்தப்பட்டது. டாஸ்மாக் மாநில குழு உறுப்பினர் நவீன் சந்திரன் மற்றும் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.


Next Story