பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம்
பங்குகளை தனியாருக்கு விற்பதை கண்டித்து எல்ஐசி ஊழியர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஊட்டி
எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை பங்கு சந்தையில் முதலீடு செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் சார்பில், ஊட்டி எல்.ஐ.சி. அலுவலகம் முன்பு மெழுகுவர்த்தி ஏந்தி போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்துக்கு ஊட்டி கிளை தலைவர் கோபால் தலைமை தாங்கினார். செயலாளர் தினேஷ்ராஜ் முன்னிலை வகித்தார்.
போராட்டத்தில் எல்.ஐ.சி.யின் 5 சதவீத பங்குகளை தனியாருக்கு தாரை வார்ப்பது நாட்டு நலனுக்கு எதிரானது. எல்.ஐ.சி. சொத்தில் கட்டு மான பணிகள், நீர்ப்பாசனம், ரெயில்வே போன்றவற்றிற்கு நிதி செலவிடப் படுகிறது. தனியாருக்கு முதலீடு செய்வதன் மூலம் துறைகளுக்கு நிதி குறை யும். எல்.ஐ.சி. பங்கு விற்பனைக்கு அனுமதிக்கக்கூடாது என்று வலியுறுத்தப் பட்டது.
இதுபோன்று கூடலூரில் நடந்த போராட்டத்திற்கு எல்.ஐ.சி. ஊழியர்கள் சங்க தலைவர் மைதிலி தலைமை தாங்கினார். செயலாளர் அமல்ராஜ், பொருளாளர் முருகராஜ் உள்பட எல்ஐசி ஊழியர்கள், முகவர்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.
Related Tags :
Next Story