கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது


கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேர் கைது
x
தினத்தந்தி 10 March 2022 8:50 PM IST (Updated: 10 March 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

கர்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்கள் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

கூடலூர்.

கூடலூர் -கர்நாடக எல்லையான கக்கநல்லா சோதனைச்சாவடியில் மசினகுடி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜயன் தலைமையிலான போலீசார் வாகன சோதனை செய்தனர். 

அப்போது மைசூரில் இருந்து முதுமலை, கூடலூர் வழியாக ஊட்டிக்கு செல்லும் அரசு பஸ்சுக்குள் ஏறி பயணிகளிடம் சோதனை செய்தனர். அப்போது சந்தேகப்படும்படியாக இருந்த 2 பேரின் பையில் சோதனை செய்தபோது அதில் ஏராளமான புகையிலை பொருட்கள் இருந்தன. 

உடனே போலீசார் 2 பேரிடம் விசாரணை நடத்தியதில், அவர்கள் பந்தலூர் நெல்லியாளத்தை சேர்ந்த ஹரிஷ் (வயது 30), அப்சல் (32) என்பதும் கா்நாடகாவில் இருந்து புகையிலை பொருட்களை கடத்தி வருவதும் தெரியவந்தது. 

இதையடுத்து போலீசார் 2 பேரையும் கைது செய்ததுடன், அவர்களிடம் இருந்த புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர். 


Next Story