காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த லாரி திருட்டு


காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த லாரி திருட்டு
x
தினத்தந்தி 10 March 2022 8:50 PM IST (Updated: 10 March 2022 8:50 PM IST)
t-max-icont-min-icon

காரைக்கால் துறைமுகத்தில் நிறுத்தியிருந்த லாரி மர்ம நபர்களால் திருடப்பட்டது.

காரைக்கால், மார்ச்.10-
தஞ்சை   மாவட்டம்  பட்டுக்கோட்டையை சேர்ந்த பிரபா கரன். இவருக்கு சொந்தமான லாரியில் அதே  ஊரைச்சேர்ந்த மரியதாஸ் மகன் ஜான்பாண்டியன்  டிரைவராக வேலை செய்கிறார். 
சம்பவத்தன்று காரைக்கால் மீன்பிடி துறைமுகத்தில் மீன் ஏற்றுவதற்காக ஜான்பாண்டியன் லாரியை நிறுத்திவிட்டு, நாகை மாவட்டத்தில் உள்ள லாரி அலுவலகத்திற்கு சென்றதாக கூறப்படுகிறது. மறுநாள்  வந்து  பார்த்தபோது,   துறை முகத்தில் லாரியை  காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர், பல இடங்களில் தேடிப்பார்த்தும் லாரியை கண்டுபிடிக்க முடியவில்லை. மர்மநபர்கள் யாரோ லாரியை திருடிச்சென்றது தெரியவந்தது. 
இதுகுறித்த புகாரின்பேரில் நிரவி போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story