மாநில ஆக்கி போட்டியில் சென்னை, கோவில்பட்டி அணிகள் அரைஇறுதிக்கு தகுதி


மாநில ஆக்கி போட்டியில் சென்னை, கோவில்பட்டி அணிகள் அரைஇறுதிக்கு தகுதி
x
தினத்தந்தி 10 March 2022 9:18 PM IST (Updated: 10 March 2022 9:18 PM IST)
t-max-icont-min-icon

கோவில்பட்டியில் நடந்து வரும் மாநில ஆக்கி போட்டியில் வியாழக்கிழமை நடந்த ஆட்டத்தில் சென்னை, கோவில்பட்டி அணிகள் அரைஇறுதிக்கு தகுதி பெற்றன

கோவில்பட்டி:
கோவில்பட்டி அரசு செயற்கை புல்வெளி மைதானத்தில் பிலிப்ஸ் கிளப் சார்பில் 17-ம் ஆண்டு மாநில ஆக்கி போட்டி கடந்த 7-ந் தேதி தொடங்கி நடந்து வருகிறது. நேற்று கால் இறுதி ஆட்டங்கள் நடைபெற்றது.
முதலாவது ஆட்டத்தில் சென்னை தமிழ்நாடு ஆக்கி அகாடமி அணியும், சங்ககிரி எஸ்.எஸ்.ஓ.எஸ். ஆக்கி கிளப் அணியும் மோதியது. இதில் சென்னை அணி 4-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
2-வது ஆட்டத்தில் கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் அணியும், திண்டுக்கல் பாண்டியாஸ் அணியும் விளையாடிது. இதில் கோவில்பட்டி அணியை 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
மாலையில் நடந்த போட்டியில் கடலூர் ஜெம்ஸ் ஆக்கி கிளப் அணி 4-1 என்ற கோல் கணக்கில் சிவகங்கை யங் சேலஞ்சர்ஸ் அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் நுழைந்தது. மற்றொரு கால் இறுதி ஆட்டத்தில் மதுரை சவுத் போலீஸ் அணி 4-0 என்ற கோல் கணக்கில் கோவில்பட்டி யுனைடெட் ஆக்கி கிளப்பை அணியை வீழ்த்தி அரை இறுதிக்குள் புகுந்தது.
இன்று (வெள்ளிக்கிழமை) அரை இறுதி போட்டிகள் நடக்கிறது. முதலாவது போட்டியில் சென்னை தமிழ்நாடு ஆக்கி அகாடமி அணி- கோவில்பட்டி பிலிப்ஸ் ஸ்போர்ட்ஸ் அணியும், 2-வது போட்டியில் மதுரை சவுத் போலீஸ் அணி-கடலூர் ஜெம்ஸ் ஆக்கி கிளப் அணியும் மோதுகின்றது. ெதாடா்ந்து மாலையில் இறுதிப்போட்டியும், அதை தொடர்ந்து பரிசளிப்பு விழாவும் நடக்கிறது.

Next Story