மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் மையம். உதவி கலெக்டர் ஆய்வு


மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் மையம். உதவி கலெக்டர் ஆய்வு
x
தினத்தந்தி 10 March 2022 10:06 PM IST (Updated: 10 March 2022 10:06 PM IST)
t-max-icont-min-icon

மகளிர் சுய உதவிக்குழுவினருக்கு தொழில் மையம் அமைக்க உதவி கலெக்டர் ஆய்வு செய்தார்.

ஜோலார்பேட்டை

ஜோலார்பேட்டையை அடுத்த ஏலகிரி மலை, மலைவாழ் மக்களின் வாழ்வாதாரத்தை பெருக்கும் வகையில் இங்குள்ள 25-க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக் குழுவினர் பல்வேறு உற்பத்திப் பொருட்களை உற்பத்தி செய்து கடைகள் வைத்து விற்பனை செய்து வருகின்றனர். அவர்கள் பொருட்களை உற்பத்தி செய்வதற்காக மகளிர் குழுவினருக்கு தொழில் மையம் அமைக்க அரசு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 அதன்படி ஒரு ஏக்கர் பரப்பளவில் தொழில் மையம் அமைப்பதற்காக திருப்பத்தூர் மாவட்ட மகளிர் திட்ட இயக்குனர் உமா மகேஸ்வரி அத்தனாவூர் ஊராட்சி மன்ற அலுவலகம் அருகே ஆய்வு மேற்கொண்டார்.

இதனையடுத்து பள்ளக்கனியூர் பகுதியில் 98 ஏக்கர் பரப்பளவில் தாவரவியல் பூங்கா அமைய உள்ள இடத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வின்போது ஜோலார்பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலர் விநாயகம், ஊராட்சி மன்ற தலைவர் ராஜஸ்ரீ கிரி வேலன் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Next Story