திருமலைராஜன் ஆற்றில் மண் அள்ளிய 3 பேர் கைது


திருமலைராஜன் ஆற்றில் மண் அள்ளிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 11 March 2022 12:15 AM IST (Updated: 10 March 2022 10:11 PM IST)
t-max-icont-min-icon

திருமருகல் அருகே திருமலைராஜன் ஆற்றில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

திட்டச்சேரி:-

திருமருகல் அருகே திருமலைராஜன் ஆற்றில் அனுமதியின்றி மண் அள்ளிய 3 பேர் கைது செய்யப்பட்டனர். 3 டிராக்டர்கள் பறிமுதல் செய்யப்பட்டன.  

அனுமதியின்றி...

நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் திருக்கண்ணபுரம் போலீஸ் சரகம் பொறக்குடி - நெய்குன்னம் இடையே திருமலைராஜன் ஆற்றில் அனுமதியின்றி மண் அள்ளப்படுவதாக திருக்கண்ணபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. 
தகவலின்பேரில் திருக்கண்ணபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் இரணியன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். அங்கு பொக்லின் எந்திரம் கொண்டு 3 டிராக்டர்களில் மண் அள்ளிக்கொண்டிருந்தனர். அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தியதில் அனுமதியின்றி டிராக்டர்களில் மண் அள்ளியது தெரியவந்தது. 

3 பேர் கைது

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து டிராக்டர்களை ஓட்டிய ஏர்வாடி ஊராட்சி விச்சூர் காலனி தெருவை சேர்ந்த கலைவாணன் (வயது 30), கிடாமங்கலம் மெயின் ரோட்டை சேர்ந்த கனகராஜ் (30), அம்பல் ஊராட்சி பொறக்குடி தேவாதிநல்லூர் பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (29) ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். மேலும் மண் அள்ளிய 3 டிராக்டர்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.

Next Story