கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தொழிலாளி கைது


கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தொழிலாளி கைது
x
தினத்தந்தி 11 March 2022 12:15 AM IST (Updated: 10 March 2022 10:14 PM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் ஜாமீனில் வெளிவந்த தொழிலாளி கைது செய்யப்பட்டார்.

வேதாரண்யம்:-

வேதாரண்யம் அருகே உள்ள செம்போடை கிராமத்தை சேர்ந்தவர் சிந்தாமணி (வயது68). இவருடைய கணவர் வைத்தியநாதன் இறந்துவிட்டார். இவர்களுக்கு 4 மகன்களும், 3 மகள்களும் உள்ளனர். இதில் 2-வது மகன் தமிழ்ச்செல்வன் (44). தொழிலாளி. இவருக்கு திருமணம் ஆகவில்லை. கடந்த ஆண்டு இவருடைய சகோதரர் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பான கொலை வழக்கில் கைதான தமிழ்ச்செல்வன், தற்போது ஜாமீனில் வெளியே வந்துள்ளார். இந்த நிலையில் சம்பவத்தன்று தனது தாய் சிந்தாமணியிடம் சொத்துக்கேட்டு தகராறில் ஈடுபட்டார். அப்போது அவரை தமிழ்ச்செல்வன் தாக்கி, அரிவாளால் வெட்ட முயன்றார். இதை சிந்தாமணி தடுத்ததில் இடது கையில் அவருக்கு காயம் ஏற்பட்டது. இதையடுத்து அவர் வேதாரண்யம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து வேதாரண்யம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சுப்ரியா, சப்-இன்ஸ்பெக்டர்கள் தேவபாலன், தேவசேனாதிபதி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தமிழ்ச்செல்வனை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story