நாமக்கல்லில் தொடர் திருட்டு: 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது
நாமக்கல்லில் தொடர் திருட்டு: 17 வயது சிறுவன் உள்பட 4 பேர் கைது
நாமக்கல்:
நாமக்கல்லில் தொடர் திருட்டில் ஈடுபட்ட 17 வயது சிறுவன் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
லாரி டிரைவரிடம் திருட்டு
நாமக்கல் ஏ.எஸ்.பேட்டையை சேர்ந்தவர் ஞானவேல் (வயது 30). லாரி டிரைவர். இவர் கடந்த 8-ந் தேதி இரவு 12 மணி அளவில் அங்குள்ள 1-வது தெருவில் தனது மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு நண்பர்களுடன் பேசி கொண்டு இருந்தார்.
அப்போது அங்கு வந்த லக்கம்பாளையம் காந்திநகர் பகுதியை சேர்ந்த சந்துரு (21) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய இருவரும் மோட்டார் சைக்கிள் டேங்க் கவரில் இருந்த செல்போன், டிரைவிங் லைசென்ஸ், ரூ.450 ஆகியவற்றை திருடி கொண்டு ஓட்டம் பிடித்தனர். அவர்களை ஞானவேல் தனது நண்பர்களுடன் விரட்டி சென்று மடக்கி பிடித்தார். இதில் அவர்கள் கீழே தவறி விழுந்ததில் காயம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
4 பேர் கைது
அவர்கள் கொடுத்த தகவலின் பேரில் சற்று தள்ளி திருட்டு மொபட்டுகளுடன் நின்று கொண்டு இருந்த லட்சுமிநகர் அஜய் (22), காந்திநகர் ஜெகதீஸ்வரன் (19) ஆகியோரையும் மடக்கி பிடித்தனர். பின்னர் பிடிபட்ட 4 பேரையும் நாமக்கல் போலீசில் ஒப்படைத்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 2 மொபட்டுகள், 2 வெள்ளி கொடி, தங்க பொட்டு தாலி, செல்போன் உள்பட ரூ.26 ஆயிரம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.
இதை தொடர்ந்து 17 வயது சிறுவன் உள்பட 4 பேரையும் கைது செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இவர்கள் பல்வேறு இடங்களில் தொடர் திருட்டில் ஈடுபட்டு வந்து இருப்பது போலீசாரின் முதல்கட்ட விசாரணையில் தெரியவந்து உள்ளது.
Related Tags :
Next Story