மேற்குவங்காளத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை


மேற்குவங்காளத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை
x
தினத்தந்தி 11 March 2022 12:15 AM IST (Updated: 10 March 2022 10:34 PM IST)
t-max-icont-min-icon

மேற்குவங்காளத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது.

நாகப்பட்டினம்:-

மேற்குவங்காளத்தில் துப்பாக்கி சூட்டில் பலியான நாகையை சேர்ந்த எல்லை பாதுகாப்பு படை வீரர் உடல் சொந்த ஊரில் அடக்கம் செய்யப்பட்டது. அப்போது 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதை செலுத்தப்பட்டது. 

எல்லை பாதுகாப்பு படை வீரர் சாவு

நாகை மாவட்டம் கீழையூர் பள்ளிக்கூட தெருவை சேர்ந்தவர் சிங்காரவேல். இவருடைய மகன் ஞானசேகரன்(வயது 45). எல்லை பாதுகாப்பு படை வீரரான இவர், மேற்கு வங்காள மாநிலத்தில் வங்காளதேச எல்லையை ஒட்டி முர்ஷிதாபாத் நகரில் உள்ள எல்லை பாதுகாப்பு படை முகாமில் ஏட்டாக பணியாற்றி வந்தார்.
அதே முகாமில் பணியாற்றி வந்தவர் ஏட்டு ஜான்சன் டோப்போ. கடந்த 7-ந் தேதி இவர்கள் இருவருக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு மோதல் நடந்தது. அப்போது ஞானசேகரை, ஜான்சன் டோப்போ தனது துப்பாக்கியால் சுட்டுக்கொன்றார். பின்னர் தன்னைத்தானே சுட்டு தற்கொலை செய்துகொண்டார். 

சொந்த ஊரில் அடக்கம்

துப்பாக்கி சூட்டில் பலியான ஞானசேகரன் உடல் மேற்கு வங்காளத்தில் இருந்து விமானம் மூலமாக கோவை கொண்டு வரப்பட்டது. அதனைத்தொடர்ந்து ராணுவ வாகனம் மூலமாக அவரது சொந்த ஊரான நாகை மாவட்டம் கீழையூருக்கு நேற்று கொண்டு வரப்பட்டு, பொதுமக்கள் மற்றும் உறவினர்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்டது.
முன்னாள் அமைச்சர் ஓ.எஸ்.மணியன் எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் அவருடைய உடலுக்கு அஞ்சலி செலுத்தினர். பின்னர் அலங்கரிக்கப்பட்ட ராணுவ வாகனத்தில் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு ஈசனூர் பகுதியில் உள்ள கல்லறை தோட்டத்தில் கிறிஸ்தவ முறைப்படி அடக்கம் செய்யப்பட்டது. 

21 குண்டுகள் முழங்க மரியாதை

முன்னதாக எல்லை பாதுகாப்பு படை வீரர்களின் 21 குண்டுகள் முழங்க இறுதி மரியாதை செலுத்தினர். முன்னதாக நாகை மாவட்ட துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன், போலீஸ் துறை சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். 
ஞானசேகரனின் உடல் மீது போற்றப்பட்டிருந்த தேசியக்கொடி அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. இறுதி சடங்கில் அரசுத்துறை அதிகாரிகள், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டு அஞ்சலி செலுத்தினர். 

Next Story