சின்னசேலம் அருகே சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது
சின்னசேலம் அருகே சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
சின்னசேலம்,
சின்னசேலம் அருகே கல்லாநத்தம் கிழக்கு காட்டுக்கொட்டாயை சேர்ந்தவர் சேண்டி மகன் ராஜேந்திரன் (வயது 39). சாராய வியாபாரியான இவர் கடந்த மாதம் 17-ந்தேதி சின்னசேலம் அடுத்த கனியாமூர் ஆற்றுப்பாலம் அருகே 60 லிட்டர் சாராயத்தை விற்பனை செய்தார்.
அப்போது, அந்த பகுதியில் ரோந்துச்சென்ற சின்னசேலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரசேகரன் மற்றும் போலீசார், சாராயம் விற்ற ராஜேந்திரனை கையும் களவுமாக பிடித்து கைது செய்து, சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
தடுப்பு காவல் சட்டத்தில் கைது
தொடர்ந்து அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். ராஜேந்திரன் மீது சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் மேலும் 2 சாராய வழக்குகள் உள்ளது. இவரின் குற்றச்செயலை கட்டுப்படுத்தும் வகையில், அவரை தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வகுமார் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார்.
அதையடுத்து மாவட்ட கலெக்டர் ஸ்ரீதர் உத்தரவின்பேரில் ராஜேந்திரனை சின்னசேலம் போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்து, அதற்கான நகலை திருக்கோவிலூர் கிளை சிறையில் இருந்த அவரிடம் சிறை அலுவலர்கள் மூலம் வழங்கினர். தொடர்ந்து ராஜேந்திரன் கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
Related Tags :
Next Story