மீனவர்கள் 29 பேர் தமிழகம் வருகை


மீனவர்கள் 29 பேர் தமிழகம் வருகை
x
தினத்தந்தி 10 March 2022 10:51 PM IST (Updated: 10 March 2022 10:51 PM IST)
t-max-icont-min-icon

விடுதலை செய்யப்பட்ட 29 மீனவர்கள் தமிழகம் வந்தனர்

ராமேசுவரம், 
இலங்கை சிறையில் இருந்து மீனவர்கள் விடுதலை செய்யப்பட்ட ராமேசுவரம் உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த 29 பேர் தமிழகம் வந்தனர். 
மீனவர்கள் விடுதலை 
ராமேசுவரத்தில் இருந்து கடந்த மாதம் 12-ந் தேதி 2 விசைப்படகுகளில் மீன் பிடிக்க சென்ற 12 மீனவர்களை எல்லை தாண்டி மீன்பிடித்ததாக கூறி இலங்கை கடற்படையினர் கைது செய்து யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர். அவர்கள் 12 பேரையும் கடந்த மாதம் 28-ந் தேதி ஊர்க்காவல் துறை கோர்ட்டு விடுதலை செய்தது. இதே போல் இலங்கை சிறையில் தவித்து வந்த நாகை மற்றும் காரைக்கால் பகுதியை சேர்ந்த 21 மீனவர்களும் விடுதலை செய்யப்பட்டனர். இந்த 21 பேரும், ராமேசுவரம் மீனவர்கள் 12 பேரில் 8 பேரும் என மொத்தம் 29 பேர் இலங்கையில் இருந்து விமானம் மூலம் புறப்பட்டு நேற்று காலை சென்னை விமான நிலையம் வந்து இறங்கினார்கள். அங்கிருந்து அவர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கொரோனா பாதிப்பு 
மீதமுள்ள ராமேசுவரத்தை சேர்ந்த 4 மீனவர்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உள்ளதால் கொழும்பில் தங்க வைக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக கூறப்படுகிறது. குணமடைந்த பின்னர் 4 மீனவர்களும் விரைவில் விமானம் மூலம் தமிழகம் அழைத்து வரப்படுவார்கள் என்று தெரிகிறது. 
மீனவர்கள் விடுதலை செய்யப்பட்டு வரும் நிலையிலும், மீனவர்களின் படகுகள் விடுவிக்கப்படாமல் அரசுடைமை ஆக்கப்பட்டு வருவது‌ அதிர்ச்சியையும், மனவேதனையையும் ஏற்படுத்தி வருவதாக தமிழக மீனவர்கள் தெரிவித்தனர். எனவே படகுகளையும் மீட்டு கொண்டு வர மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என தமிழக மீனவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story