வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்


வேலைவாய்ப்பு முகாமில் இளைஞர்கள் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும். அமைச்சர் ஆர்.காந்தி வேண்டுகோள்
x

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் படித்து வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என அமைச்சர்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ராணிப்பேட்டை

ராணிப்பேட்டை மாவட்டத்தில் நடைபெறும் வேலைவாய்ப்பு முகாமில் படித்து வேலை இல்லாத இளைஞர்கள் மற்றும் பெண்கள் கலந்து கொண்டு பயன் பெற வேண்டும் என அமைச்சர்காந்தி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதுகுறித்து கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் ஆர்.காந்தி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

வேலைவாய்ப்பு முகாம்

வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம், தமிழ்நாடு மாநில ஊரக, நகர்ப்புற வாழ்வாதார இயக்கம், மாற்றுத் திறனாளிகள் நலத் துறை மற்றும் ஜி.கே. உலகப் பள்ளி ஆகியவை இணைந்து படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் வேலை பெறும் நோக்கில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நாளை (சனிக்கிழமை) காலை 8 மணி முதல் மாலை 3 மணி வரை ராணிப்பேட்டை மாவட்டம் ஆம்மூர் லாலாப்பேட்டை ரோடில் உள்ள ஜி.கே. உலகப் பள்ளியில் நடைபெற உள்ளது.

இந்த முகாமில் 150-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள் கலந்து கொண்டு தங்களுக்கான தகுதியான நபர்களைத் தேர்வு செய்து, பணி நியமனம் செய்ய உள்ளனர்.

பயன்பெற வேண்டும்

இந்த வேலைவாய்ப்பு முகாமில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற பகுதிகளில் உள்ள 18 வயது முதல் 40 வயது வரை உள்ள படித்த ஆண்கள் மற்றும் பெண்கள் 5-ம் வகுப்பு முதல் எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்- 2, ஐ.டி.ஐ., டிப்ளமோ, டிகிரி உள்ளிட்ட கல்வி தகுதிகளை உடைய வேலை நாடுபவர்கள் கலந்து கொண்டு, தங்களுக்குத் தேவையான வேலையினை தாங்களே தேர்வு செய்து பயன் பெறலாம்.

விருப்பம், தகுதி உள்ள வேலை நாடுபவர்கள் பாஸ்போர்ட் அளவு புகைப்படம், அனைத்து கல்வி சான்றுகளுடன் முகாமில் கலந்து கொண்டு வேலை வாய்ப்பினை பெற்றிடலாம். இந்த முகாமில் கலந்து கொள்ள வருபவர்களுக்கு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் சார்பில், அரக்கோணம், சோளிங்கர், நெமிலி, அம்மூர், ஆற்காடு, திமிரி, கலவை ஆகிய பகுதிகளில் இருந்தும், ராணிப்பேட்டை முத்துக்கடை, வாலாஜா பஸ் நிலையங்கள் மற்றும் வாலாஜா ரோடு ெரயில் நிலையம் ஆகிய பகுதிகளில் இருந்து சிறப்பு பேருந்துகள் காலை 7 மணி முதல் இயக்கப்படுகிறது. மேலும் பல்வேறு இடங்களில் இருந்து கல்லூரி பஸ்கள் இயக்குவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. ஆகவே முகாமில் படித்த இளைஞர்கள் பெண்கள் தவறாமல் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story