சிறுமிக்கு கட்டாய திருமணம்


சிறுமிக்கு கட்டாய திருமணம்
x
தினத்தந்தி 10 March 2022 11:09 PM IST (Updated: 10 March 2022 11:09 PM IST)
t-max-icont-min-icon

பெரியகுளம் அருகே சிறுமிக்கு கட்டாய திருமணம் செய்து வைத்த தொழிலாளி உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தேனி: 

பெரியகுளம் அருகே அ.வாடிப்பட்டியை சேர்ந்தவர் வேல்முருகன். கூலித்தொழிலாளி. இவருக்கு 15 வயது சிறுமியை, சிறுமியின் பெற்றோர் கட்டாயப்படுத்தி திருமணம் செய்து வைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து தேனி மாவட்ட குழந்தைகள் நல குழுவுக்கு தகவல் கிடைத்தது. 

 அங்கு சென்று குழந்தைகள் நலக்குழு தலைவர் விஜயசரவணன் விசாரணை நடத்தினார். பின்னர் இந்த இளம் வயது திருமணம் குறித்து நடவடிக்கை எடுக்குமாறு தேனி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் செய்தார். அதன்பேரில் வேல்முருகன், சிறுமியின் பெற்றோர் உள்பட 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


Next Story