டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
டாஸ்மாக் பணியாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
ராமநாதபுரம்,
டாஸ்மாக் ஊழியர் மாநில சம்மேளனத்தின் சார்பில் டாஸ்மாக் ஊழியர்களின் பணிநிரந்தரம், சுழற்சி முறை பணியிட மாறுதல் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் அரண்மனை முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நம்புராஜன் தலைமை தாங்கினார்.
ஆர்ப்பாட்டத்தின்போது டாஸ்மாக் ஊழியர்களுக்கு சுழற்சி முறை பணியிட மாறுதல் கொள்கை உருவாக்கவேண்டும், கவுன்சிலிங் அடிப்படையில் வெளிப்படை தன்மையுடன் பொதுப்பணியிட மாறுதல் வழங்கவேண்டும். முறையற்ற பணியிட மாறுதல்களை ரத்து செய்ய வேண்டும். 19 ஆண்டுகளாக பணியாற்றிவரும் டாஸ்மாக் ஊழியர்களை பணி நிரந்தரம் செய்து காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊழியர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வழங்க வேண்டும். கடை பராமரிப்பு செலவின தொகை வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். இதில், சி.ஐ.டி.யு. மாவட்ட செயலாளர் சிவாஜி, டாஸ்மாக் சங்க மாவட்ட செயலாளர் தனுஷ்கோடி, சி.ஐ.டி.யு. மாவட்ட நிர்வாகிகள் சுடலைக்காசி, மலைராஜன், மோட்டார் வாகன சங்க தலைவர் மலைக்கண்ணு, டாஸ்மாக் சங்க மாவட்ட பொருளாளர் பால்ராஜ் மற்றும் டாஸ்மாக் பணியாளர்களும், சி.ஐ.டி.யு. நிர்வாகிகளும் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story